நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயற்பாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைவு

நீதித்துறையின் கண்ணியம் மற்றும் அதன் முன்வருகையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த கூட்டறிக்கையில் கையொப்பமிட்டனர்.

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் வரலாறு காணாத நெருக்கடியை நாடு தற்போது எதிர்கொண்டுள்ளதோடு, இத்தகைய சூழ்நிலைக்கு எதிரான ஒரு ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பமாக இந்த கையொப்பமிடுதல் நிகழ்வு இடம் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கழிவகற்றல் கட்டமைப்பு திருத்தப்பணியில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு

Mon Mar 27 , 2023
கொழும்பு – கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள கழிவகற்றல் கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போது நோய்வாய்ப்பட்ட நகர சபை ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மயக்கமடைந்ததை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். விஷவாயு உட்சென்றதால் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Like