சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிய பேருந்து ஒன்று நோட்டன் பிரிஜ் பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.
இதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.