கல்கிசையில் 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்கள் குறித்த சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை பிரசுரித்த இணையத்தளத்தின் உரிமையாளரும் அதன் பணக் கட்டுப்பாட்டாளர்கள் என தெரிவித்தார். பாணந்துறை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இதுவரை இரண்டு பெண்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 14 பேரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை CID யினர் மேற்கொண்டுவருகின்றனர். தொலைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்திகள் என்பன சோதனை செய்யப்பட்டு வருகின்றன.




Source:
https://www.lankadeepa.lk/