வட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனாத் தொற்றாளருக்கு மதுபானம் வழங்குவதற்காக மதில் ஏறிக்குதித்த இருவர் நேற்று இரவு பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இவர்கள் பருத்தித்துறையைச் சேர்ந்த தொற்றாளர் ஒருவருக்கே அவர்கள் மதுபானம் கொண்டுவந்துள்ளதுடன் தாம் மல்லாகத்தைச் சேர்ந்தவர்கள் என்று இருவரும் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.