இலங்கையில் அரங்கேறிய மற்றுமொரு கொடூரச் சம்பவம்…!
12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கர்ப்பம். தந்தை கைது…!
பதுளை – தெமோதர பகுதியில் 12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் திடீர் சுகயீனமடைந்ததை அடுத்து, இருவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, இருவரும் கர்ப்பம் தரித்துள்ளமை வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில், சிறுமிகளின் தந்தையான 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமிகள் தொடர்ந்தும் பதுளை வைத்தியசாலையில் சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.