உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் இரண்டு நாள் விவாதம்

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இரண்டு நாள் விவாதம் கோரினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் நாட்டில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், இது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் சபை ஒத்திவைப்பின் போது இந்த விவாதம் விவாதமாக நடைபெறும்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) பிற்பகல் 1.30 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கடந்த வாரம் இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாம் உட்பட மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை விரைவில் நியமிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிக்கிறார்.

Wed Mar 1 , 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாம் உட்பட மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை விரைவில் நியமிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிக்கிறார். காமினி லொகுகே, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ். எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu