இலங்கைக்கு மேலதிக பொருளாதார உதவிகளை மேற்கொள்வதற்காகவும் இங்குள்ள தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்காக இந்திய அரசின் பிரதம பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று விசேட விமானம் மூலம் நாளை (23) இலங்கைக்கு வரவுள்னர்.
விசேட விமானம் மூலம் வரும் இக்குழுவினர் மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை ஜூன் 20 அன்று புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட நடத்திய சந்திப்பின் விளைவாக இந்த விஜயம் அமைந்துள்ளது.
இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மற்றொரு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கான ஆயத்தம் இடம்பெற்றுவருகிறது.
Daily mirror