மெதிரிகிரிய கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வந்த இருவருக்கு இடையில் வரிசையில் ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பொலனறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.