கண்டி கட்டுகஸ்தோட்டையில் 12 வருட காதலில் காதலியை தீ வைத்து கொளுத்திய காதலன் மூவர் மரணம்

#கண்டியில் இடம்பெற்ற சம்பவம் 12 வருட காதல் முடிந்தது குடும்பத்தையே #தீ வைத்து எரித்த காதலன் !!

கண்டி கட்டுகஸ்தோட்டை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்கும்புறவத்த பிரதேசத்தில் மூன்று பேரை பலியெடுத்த தீவிபத்து காதல் உறவின் முறிவினால் எழுந்த கோபத்தினால் உருவானது என்பது தெரியவந்துள்ளது.

காதலன் வீட்டுக்குள் நுழைந்து யாரும் வெளியே வராத படி கதவை தள்ளிவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். இது நேற்று மாலை சுமார் 6.40 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் இந்த கொடூர சம்பவத்தில் தந்தை மகள் மற்றும் குறித்த காதலி உயிரிழந்துள்ளனர் இதில் 60 வயதுடைய தாயார் பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த தந்தை முத்துத்தம்பி ஈஸ்வரன் 60 வயதுடைய இவர் கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் வெற்றிலை விற்பனை செய்து வருபவர்,

இந்நிலையில் மூவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை வீட்டிற்கு வந்து வீட்டில் பெற்றோலை தெளித்து தீ வைத்துள்ளதாக பொலீஸார்தெரிவித்துள்ளனர்

இந்த யுவதியும் காதலனும் கடந்த 12 வருடங்களாக காதல் உறவில் விழுந்துள்ளனர். இவர் காதலி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். காதலன் #கண்டியில் உள்ள #நகைக்கடை ஒன்றில் பணிபுரிபவர் என்பதும் இவர் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலீசாரால் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் இதைத்தொடர்ந்தே அவருடனான உறவை குறித்த யுவதி துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காதலன் ஏற்க முடியாத நிலையில் காதலி வீட்டுக்கு வந்து தகறாறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சம்பவம் அடிக்கடி நிகழ்வதால் அயலவர்கள் கண்டு கொள்வதில்லை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை காதலன் ஒரு கலன் பெட்ரோலுடன் வீட்டுக்கு வந்துள்ளான். காதலியை தனக்குத் திருமணம் செய்து வைக்காவிட்டால் அனைவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

அவனுடன் தந்தை மற்றும் தாயாரும் தகராறில் ஈடுபட்டதால் காதலன் வீட்டின் முன் பக்க கதவை அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். எனினும் அந்த வீட்டில் அடிக்கடி தகராறு நடப்பதால் அயலவர்கள் பெரிதாக எடுக்கவில்லை, எனினும் என்னை காப்பாற்றுங்கள் என தொடர்ந்து வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் அயலவர்கள் அங்கு சென்று பார்த்து விபரீதத்தை உணர்ந்த பின்,

அயலவர்கள் வீட்டுக் கதவை உடைத்து உள் நுழைந்து 60 வயதான தாய் ராணியம்மாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், ஏனையவர்களை காப்பாற்ற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்…

Next Post

சட்டத்தரணிகள் சங்கம் (BASL) நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவு

Fri Mar 25 , 2022
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இரு அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி, நியாயமான விலையில் வழங்கத் தவறியமை, இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என BASL இன் மனுக்களில் குறிப்பிடுகின்றன. சட்டமா அதிபர், அமைச்சரவை, மத்திய […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu