தடுப்பூசி இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் இனி பொது இடங்களுக்கு செல்ல தடை

கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் இனி பொது இடங்களுக்கு செல்ல தடை வெளியான முக்கிய தகவல்…*

கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் ஊடாக தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டமைக்கான செயலி (APP) ஒன்றை தயாரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த செயலி இல்லாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Post

பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதில் கொரோனா நிலைமையால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம்

Mon Nov 8 , 2021
கொரோனா நிலைமையால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி இல்லை என்று கூறுவது வேடிக்கையானது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You May Like