இந்த அரசாங்கம் மக்களைத் தூண்டிவிட முயற்சிக்கிறது வெளியான தகவல்

அதிபர் – ஆசிரியர் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தெளிவான கலந்துரையாடலுக்கு அரசாங்கம் இன்னும் செவி சாய்க்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகிறது.

அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பாக மேலும் கூறுகையில், அதிபர் – ஆசிரியர் சங்கம் இப் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் ஒரு படி பின்வாங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் போராட்டத்தை அரசு நீட்டிக்கவிட்டால், மாணவர்களுக்கான ஆன்லைன் கல்வி மட்டுமே கிடைக்கும். இந்த அரசாங்கம் எங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட முயற்சிக்கிறது. தற்போது பாடசாலைகள் தொடங்குவது பற்றி விவாதித்து கொண்டிருக்கின்றனர்.

பாடசாலைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சனைக்கு சாதகமான தீர்வைக் காண்பது அரசாங்கத்தின் பொறுப்பு என நாங்கள் கூறுகிறோம்.

பாடசாலை ஆரம்பிக்கும் போது மாணவர்கள் மட்டும் பாடசாலைக்கு வரப்போவதில்லையே, எங்கள் சார்பில், நாங்கள் இப்போது ஒரு படி பின்வாங்கியுள்ளோம். இத்தகைய சூழ்நிலையில் கூட இவ் அரசாங்கம் நெகிழ்ந்து போக தீர்மானிக்கவில்லை. உயர்தர மாணவர்கள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத் திட்டங்கள் கூட இன்னும் உள்ளடக்கப்படவில்லை.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Thedal news Sri Lanka …

Next Post

2020ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Thu Sep 23 , 2021
2020ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை இன்றைய தினம் (23) வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று நள்ளிரவுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் முதலாம் இணைப்பு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu