இரண்டு பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்து போராட்டக்காரர்களை அடக்குவதற்கு அனுப்பியது தொடர்பாக பாணந்துறை (தெற்கு) தலைமைப் பொலிஸ் பரிசோதகரிடம் பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இரு பெண் பொலிஸாரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என பெண் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின்போது பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமைக்கு ஊக்கப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் விசாரணை இன்னும் நடந்து வருகிறது.
Divaina