ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ எவ்வித மாற்றங்களும் ஏற்பட மாட்டாது

தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ எவ்வித மாற்றங்களும் ஏற்பட மாட்டாது என்று தான் பொறுப்புடன் கூறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலையில், அதனை திசை திருப்புவதற்கு இவ்வாறான விடயங்களை கூறுவது நியாயமானது அல்ல என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் பிரதமர் பதவிக்கு மீண்டும் மஹிந்தவை நியமிப்பது தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் இரண்டு நாள் விவாதம்

Wed Mar 1 , 2023
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இரண்டு நாள் விவாதம் கோரினார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் நாட்டில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், இது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu