கடந்த ராஜபக்ச ஆட்சி ஒட்டுமொத்த விவசாயிகளையும் அழித்து விவசாயிகளை நிர்க்கதிக்குள்தள்ளியதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரங்களையும், களைக்கொள்ளி நாசினிகளையும் ,பீடை நாசினிகளையும், ஏனைய இடுபொருட்களையும் பெற்றுத்தருவதாகவும் நாங்கள் இன்னும் பாரம்பரிய முறையிலேயே விவசாயம் செய்து வருவதாகவும், புதிய தொழிநுட்பங்களை பிரயோகிப்பதில்லை என்பதால் விளைச்சலும் குறைவாககிடைப்பதாகவும், புதிய தொழிநுட்பங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் யுகத்தை தாம் ஆரம்பிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாய உற்பத்திப் பொருட்களை பலாத்தகாரமாக அரசாங்கம் கொள்முதல் செய்து மக்களின் ஜீவனோபாயத்தை அழிக்கும் யுகத்துக்கு முற்றிப்புள்ளி வைத்து நிர்ணய விலைக்கு விவசாய உற்பத்திப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் யுகத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் ஏற்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இன,மத,குல,வகுப்பு பேதங்களுக்கு இடமில்லை எனவும், சகல இனங்களைச் சேர்ந்தேர்களுக்குமான கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்வதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியில் முதலாம் தரபிரஜை, இரண்டாம் தரப் பிரஜை என பாகுபாடு இல்லை எனவும், இந்நாட்டின் சகலருக்குமான கட்சியாக எமது கட்சி திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டை மீட்டெடுக்க விரும்புவதாக இருந்தால் கல்வித்திட்டத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும்,விஞ்ஞானம், கணிதம், தொழிநுட்பம், சூழலியலில் என பல துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், பாடத்திட்டங்களில் மாற்றத்தைக் ஏற்படுத்த வேண்டும் எனவும், புதிய தொழிநுட்பங்கள் உள்வாங்கப்படவேண்டும் எனவும், சம்பிரதாய கல்வி முறை இல்லாதொழிக்கப்பட்டு கணணி தகவல் தொழிநுட்பத்துடன் கூடிய உற்பத்தித் துறையை மேம்படுத்தக்கூடிய, ஏற்றுமதி இறக்குமதித் துறையை மேம்படுத்தக் கூடிய டிஜிடல் தொழிநுட்பத்திற்குள் பிரவேசித்தாக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.