மக்களுக்காக சேவையாற்றுபவர்களுக்கு மொழி தடையில்லை – வடமாகாண பிரதம செயலாளர்

நான் சிங்களவராக இருந்தாலும் தமிழ் பிரதேசத்தில் எந்தவொரு இடையூறும் இருக்காது என நம்புகிறேன் என வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவைச் செயலகத்தில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் பிரதம செயலாளராக இன்று திங்கட்கிழமை கடமையேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வவுனியா மாவட்ட செயலாளராக கடமையாற்றி இருந்தேன். தமிழ், சிங்களவர்கள் உட்பட பல மதங்களை சார்ந்தவர்களும் வவுனியாவில் வசித்தனர். அவர்களுடன் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கடமையாற்றியுள்ளேன்.

மக்களுக்காக கடமையாற்றும் போது , மொழி , இனம் என்பன தடையாகவோ பிரச்சனையாகவோ இருக்கப்போவதில்லை என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Next Post

அடுத்த வாரம் முதல் பாடசாலைகளை மீள திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் முககவசங்களை வழங்கும் திட்டம்

Mon Jul 26 , 2021
அடுத்த வாரம் முதல் பாடசாலைகளை மீள திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் முககவசங்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பாக முககவச தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். http://Lankadeepa

You May Like