இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவிக்கின்றார்.
இந்த இரத்தினக்கல்லுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த இரத்தினக்கல்லை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முன்னர், அதன் பெறுமதியை கணிப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை அந்த ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த இரத்தினக்கல் விற்பனை செய்யப்படும் தொகையில், 10 வீதம் அரசாங்கத்திற்கு உரித்தாகும் என அவர் கூறுகின்றார்.
நாட்டில் நிதி தொடர்பிலான பிரச்சினை காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான கல் ஒன்று கிடைக்கின்றமை அதிஷ்டமானது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த கல்லை இயலுமான வரை விரைவில் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து 510 கிலோகிராம் எடையுடைய இரத்தினக்கல் கொத்தொன்று ஒன்று கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கிடைத்துள்ளது