குரங்கம்மை நோயை உலகச் சுகாதார நிறுவனம் அவசர நிலையாக அறிவித்துள்ளது. இது குறித்து நிபுணர் குழு நடத்திய கூட்டத்தில் அவ்வாறு முடிவெடுக்கப்பட்டது.
உலகெங்கும் 75க்கும் அதிகமான இடங்களில் 16,000க்கும் அதிகமான குரங்கம்மை நோய் பதிவாகியுள்ளதாக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறினார்.
இந்த நோயால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.நோய் விரைவாகப் பரவுவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், பதிவாகும் நாடுகளில் கிட்டத்தட்ட தடுப்புமருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.