ஆப்கனில் மீட்பு பணிக்கு அனுப்பப்பட்ட உக்ரேன் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை உக்ரேன் அரசும் ஈரானும் மறுத்துள்ளன.
இந்த விமானம் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கிய சிலரால் ஈரானுக்கு கடத்தப்பட்டது என உக்ரேன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால் விமானம் கடத்தப்படவில்லை என்றும் எரிபொருள் நிரப்புவதற்காக தங்கள் நகரான மஷ்ஹாதில் இடைநிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து உக்ரேன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஓலெக் நிகோலெங்கோ உக்ரேன் விமானம் எதுவும் கடத்தப்படவில்லை என்றும் அப்படி ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல எனவும் தெரிவித்தார். இந்த விமானம் இப்போது உக்ரேன் தலைநகரான கிவ்-ல் தரையிறங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…
Thedal News Sri Lanka …