சீனாவின் அதிநவீன செயற்கைக்கோள் ஆய்வு கப்பல் ‘யுவான் வாங் 5’ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை 7.30 மணியளவில் வந்தடைந்தது ஆகஸ்ட் 22, வரை தரித்து நிற்க வெளிவிவகார அமைச்சர் அனுமதி அளித்துள்ளது.
222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் 11 ஆயிரம் தொன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை கொண்டது. கடல் சார் கண்காணிப்பு, செயற்கை கோள் தொழில்நுட்பத்தை கொண்டதுடன் 750 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும்.