உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதற்கு அரச இரகசிய சட்டத்தை பயன்படுத்த முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அதியுயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் அணுகுமுறை இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும் எனவே 2298/53 வர்த்தமானியை திரும்பப் பெறுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ரோஹினி மாரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.