வீதிகளின் இருமருங்கிலும் பொருத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை, குறித்த நகர மற்றும் பிரதேச சபைகளே எதிர்காலத்தில் செலுத்த வேண்டியெற்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வீதி பராமரிப்புப் பணிகள் தற்போது சிரமமான நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை குறித்த கட்டணங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையே செலுத்தி வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ் வீரகோன் தெரிவித்தார்.