உடைந்த புகையிரத பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பு கோட்டைக்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையிலான கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இரட்டைப் பாதையில் இயங்கும் ரயில்கள் கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை நிலையங்களுக்கு இடையில் ஒற்றைப் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாலத்தை சீரமைக்க குறைந்தது ஐந்து நாட்கள் தேவைப்படும். இந்த காலப்பகுதியில் வெள்ளவத்தை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கரையோரப் பாதையில் இன்று 10 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.