புகையிரத பாதை திருத்தப்பணிகள் காரணமாக இம்மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு புகையிரத பாதையில் கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ நிலையங்களுக்கு இடையில் நெல்லியாகம பாதையில் 119 ஆவது மைல்கட்டுக்கு அருகில் உள்ள கடவுப்பாதை திருத்தப்பணிகள் காரணமாக இம்மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 29ஆம் திகதி காலை 07.00 மணி முதல் 11.30 மணி வரை பகுதியளவிலும், முற்பகல் 11.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை முழுமையாகவும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை 06:00 மணி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி இரவு 10:30 மணி வரை மீண்டும் பகுதியளவில் மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இம்முறை ஹஜ் கடமைக்காக 105 முகவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tue Apr 18 , 2023
திணைக்களத்தின் இணையத்தளத்தில் முகவர்கள் தொடர்பில் தகவல் பதிவிடப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் மாத்திரம் ஹஜ் பயணத்திற்கான வேலைகளை முன்னெடுக்குமாறும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தலைவர் இஸட்.ஏ.எம். பைசல் தெரிவித்தார். இம்முறை ஹஜ் கடமைக்காக இலங்கையிலிருந்து 3500 பேருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே முற்பணம் செலுத்தி பதிவு செய்தவர்கள் மிக விரைவில் தமது பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் புதிதாக பதிவு செய்ய விரும்புவோரும் விரைவில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu