நாட்டில் 15 நாட்கள் தீர்மானமிக்கது என்பதால் பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என அரசாங்கமும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் 576 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், நாளொன்றில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் எவ்வறான சுகாதார விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நேற்றைய தினம் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது