கேகாலை மாவட்டம் தெஹிஓவிட்ட
பிரதேச செயலகத்துக்குட்பட்ட தேவாலகந்து தோட்டத்தில் தோட்ட மக்கள் இன்றைய தினம் தோட்ட காரியாலயத்துக்கு முன்பாக தோட்ட அதிகாரிகளுடன் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதில் ஈடுபட்டனர்.
Covid-19 தொற்று காரணமாக தேவாலகந்த தோட்டம் முடக்கப்பட்டுள்ள நிலைமையில் தோட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளவர்களை தோட்ட நிர்வாகம் வேலைக்கு அமர்தி உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர் பொதுமக்கள். மற்றும் 100 நபர்களுக்கு மேற்பட்டவர்கள் கொரோன தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் இந்த நிலையில் தோட்ட நிர்வாகம் தொழிலாளிகளிடம் வேலை வாங்குவதாகவும் குற்றம் சாட்டி தோட்ட நிர்வாகத்துடன் எதிர்ப்பு வாக்குவாதில் ஈடுபட்டனர்
இதன்போது தோட்ட மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டிய மக்களை தோட்ட அதிகாரிகள் தோட்ட தொழிலுக்கு அமர்த்தி உள்ளனர் இதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகாத ஏனைய தொழிலாளர்களுக்கும் தொற்று ஏற்படும் எனவே தோட்டத்தையும் மூட வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்
மேலும் மக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 24 குடும்பங்களுக்கு லயன் குடியிருப்பில் 4 கழிப்பறைகளை உள்ளது எனவே மற்ற குடும்பங்களுக்கும் நோய்தொற்று பரவும் இதனால் நாங்கள் பெரிதும் அசௌகரியத்துக்கு உள்ளாகி உள்ளோம் என்றும் தெரிவித்தனர்
மற்றும் கொரோனா தொற்றினால் இன்றைய நாள் வரை 11 நாட்கள் ஆகிவிட்டன நாங்க உண்ணுவதற்கு உணவுகள் இல்லாமல் பெரிதும் சிரமத்துக்கு மதியில் வாழ்வதாக அம் மக்கள் விசனம் தெரிவித்தனர்.