இதன் போது அவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இலங்கை மக்களின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளின் போது அவர்களுக்கு பிரிட்டன் ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் புடினின் மோசமான படையெடுப்பு மற்றும் கருங்கடலின் அர்த்தமற்ற முற்றுகை ஆகியவை உலகளாவிய உணவு விநியோக பிரச்சினைகளை மோசமாக்குவதாக இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தினார். உக்ரைன் மக்கள் மீது புடின் இழைக்கும் கொடூரங்களுக்கு எதிராக ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வலியுறுத்தினார்.
தூய்மையான எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் மேலும் இங்கிலாந்து-இலங்கை ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கிலாந்து பிரதமர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடினர். அவர்கள் தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து பணியாற்துவது குறித்து கலந்துரையாடினர்.
இங்கிலாந்து அரசின் செய்திக்குறிப்பில் இருந்து….