ஜனாதிபதிக்கு விரைவில் பொது மக்களினால் வாயடைக்க நேரிடும்

அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை வாயை மூடி உட்காருங்கள் (you shut up and sit down) என கட்டளையிட்ட ஜனாதிபதி, விரைவில் பொது மக்களினால் வாயடைக்க நேரிடும் என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வரலாற்றில் மிகக் கொடூரமான சர்வாதிகாரியான அடொல்ப் ஹிட்லரின் மறு அவதாரம் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஜனாதிபதி கடும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாகவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலைத் தவிர்ப்பதற்கான அவரது முயற்சிகள் தெளிவாக இருப்பதாகவும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

அவர் விரைவில் நாட்டு மக்களால் மௌனிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

கம்புருபிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அழஹப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாளைய தினம் நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் அரச, அரை அரச மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

Mon Mar 6 , 2023
அந்தக் கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்தப் பணிப்புறக்கணிப்புடன், நாளை மறுதினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த குருகே இதனை விளக்கினார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu