எட்டியாந்தோட்டை லெவண்ட் தோட்ட மக்களின் பரிதாபம்
கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட லெவண்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் தோட்ட அதிகாரிக்கு எதிராக கடந்தமாதம் 2021.06.16ம் திகதி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள்
25 குடும்பங்களை சேர்ந்த தோட்ட பொதுமக்கள் தமது அடிப்படை வசதிகள் வேண்டும் இருப்பிடம் வேண்டும் மற்றும் என்று
தோட்ட அதிகாரிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபட்டு இருந்தார்கள்
தோட்ட நிர்வாகம் மண்சரிவு அபாயம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் தோட்ட நிர்வாகம் மக்களுக்கு தற்காலிக கூடாரங்களை வழங்கி பாதுகாப்பான இடங்களில் கூடாரங்களை அமைத்து கொண்டிருக்குமாறு தெரிவித்துள்ளனர்
பொதுமக்கள் தோட்ட நிர்வாகம் கூறியவாறு லயன் குடியிருப்புகளுக்கு முன்பாக தற்காலிக கூடாரங்களை அமைத்து இருந்தார்கள் ஜூன் 12ம் திகதி இச் சந்தர்ப்பத்தில் கூடாரங்களை வழங்கிய தோட்ட
அதிகாரிக்கு லயன் குடியிருப்பில் மண்சரிவு அபாயம் என தெரிந்தும் அவரே குடியிருக்க குடாரங்களும் வழங்கி மறுபடியும் அவர் பார்வையிட்டு பாதுகாப்பான இடங்களில் கூடாரங்களில் இருக்குமாறு கூறி அவர் மக்களுக்கு எதிராக
எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து
பயணத் தடைக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்கள் 20 கிலோமீட்டர் தூரம் நடந்து பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்கியுள்ளனர் மீண்டும் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து தோட்டத்திற்குச் சென்றுள்ளனர் பொது மக்கள்
இச் சந்தர்ப்பத்தில் தோட்ட அதிகாரி கடிதம் ஒன்றை எழுதி அதில் கை ஒப்ப இடுமாறு மக்களை வற்புறுத்துகின்றதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் 12ம் திகதியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை நிறுத்தம் செய்ததாகவும் மக்கள் கவலை கூறினார்
இந்த அவல நிலை காரணமாக மக்கள் இரண்டாவது முறையும் 2021/ 7/ 1ம் திகதி இன்று மதியம் 12 மணி அளவில் இரண்டாவது முறையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து.
மக்கள் தெரிவிப்பது மண்சரிப்பு ஏற்படும் சந்தர்ப்பத்திலும் இடியுடன் கூடிய காற்று மலை காலத்திலும்
மரத்தடியில் நிறந்திரம்மாக இருக்க முடியாதென்றும்.
இவர்களுக்கு சொந்தமாக இருக்க நிறந்திரமான நிலம் வேண்டும் என்றும் அதுவரையில் இருக்கும் கூடாரங்களையும் அகற்ற முடியாதென்றும் கவலை கூறினார்கள்