நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்..!

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியபோது அவரை பின்தொடர்ந்து வந்த பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எட்டு வயதிலேயே கொழும்பு சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

-Derana

Next Post

இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார்..!

Mon Sep 6 , 2021
ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரும், பிரபல சிங்கள பாடகருமான சுனில் பெரேரா காலமானார். 68 வயதான இவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பிய நிலையில், நியூமோனியா நிலை காரணமாக நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (06) அதிகாலை உயிரிழந்தார். இவரது பாடல்கள் சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது தமிழ் ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu