ஊருகஸ்மங் சந்தி, கொரக்கின பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இடம்பெற்ற இரண்டு மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
38 வயதுடைய பெண்ணொருவரும் 39 வயது ஆணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்த ஆண், இதற்கு முன்னர் ஏனைய இருவரை திருமணம் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.
எனினும், உயிரிழந்த இருவரும் கடந்த ஒன்றரை வருடமாக இணைந்து வாழ்ந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊருகஸ்மங் சந்தி பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.