ஆசிரியரின் 50 ஆயிரம் ரூபா கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்டு ஓடிய குரங்கு கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் , ஆசிரியைகள் இணைய வழியூடாகவே கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். இதனால் மாணவர்கள், சமிக்ஞை கிடைக்காமையால், மரங்கள், மலைகள் மற்றும் உயரமான நீர்த்தாங்கிகளின் மீதேறி கல்விக்கற்று வருகின்றமை பலரும் பார்த்துள்ளனர். இந்நிலையில் ஹப்புத்தளை ஹல்துமுல்லை, கிரிமெட்டிய என்னும் இடத்தில் இணையவழியில் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்கும் ஆசிரியை ஒருவர், போதியளவான சமிக்ஞையை பெற்றுக்கொள்வதற்காக, தன்னுடைய ஸ்மாட் கையடக்க தொலைபேசியை, மரமொன்றி கிளைகளுக்கு இடையில் வைத்துள்ளார். இதன்போது அந்த கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்ட குரங்கொன்று மரத்துக்கு மரம் தாவி கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. அதன் பெறுமதி, 50 ஆயிரம் ரூபாயா என கூறப்படுகிறது. தரம்-4 க்கு கற்பிக்கும் ஆசிரியை, ஒவ்வொருநாளும் காலை 6 மணியிலிருந்து இணையவழி ஊடாக வகுப்புகளை எடுத்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது