இலங்கையில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் அதிகாரிகள் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிர் சேதம் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே, புனித பாப்பரசர் பிரான்சிஸ் இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், வன்முறைகளுக்கு அடிபணியாமல் அமைதியான அனுகுமுறைகளைக் கடைபிடிக்குமாறும் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் ஆகியவற்றுக்கு முழுமையாக மதிப்பளித்து மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமெனவும் பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் புனித பாப்பரசர் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.