கடுமையான இருமல் மற்றும் காய்ச்சலுடன் காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவித்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் அன்று இரவில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனை மூலம் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. உயிரிழந்தவர் காலி யக்கலமுல்லையைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.