அரசாங்கத்தை ஆள்பவர்கள் நாட்டு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை சார்ந்து தற்காலிக பொறுப்பாளர்களாக இருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு நாடு தங்களுக்கு முழு உரித்தோடு எழுதித்தரப்பட்டு விட்டது என்ற போக்கில் பலர் நினைப்பதாகவும், இந்த தற்காலிக நிர்வாகப் பொறுப்பு தேர்தலின் பின்னர் மாறுபடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒரு அரசியல்வாதிக்கு ஆட்சி நிருவாகத்தின் போது இரு வழிகளிலுமான விடயப்பரப்பு பற்றிய சிறந்த புரிதல் இருக்க வேண்டும் எனவும், அந்த புரிதல் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாக பிரயோகிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்குமான திறமை இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
யார் என்ன சொன்னாலும், ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் சந்தை சக்திகளை அடிப்படையாகக் கொண்ட மனிதநேய முதலாளித்துவத்தைப் பின்பற்றுவதாகவும், ஒரு நாட்டின் செல்வத்தை அரசால் அன்றி, தனியார் துறையாலையே உருவாக்க முடியும் எனவும், இவ்வாறு உருவாக்கப்படும் செல்வம் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மாற்றுத் தரப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் உண்மையான மாற்றுத் தரப்பு யார் என்பது மக்களுக்குத் நன்றாக தெரியும் எனவும், மார்க்சிசம், லெனினிஸம், ஸ்டாலினிசம், டொரக்ஸிசம் போன்ற வாதங்களுக்கும் எங்கெல்ஸின் கோட்பாடுகளால் வங்குரோத்தான நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், உற்பத்திப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களை அரசுடமையாக்கினால் நாடு மேலும் வங்குரோத்தாகிவிடும் எனவும், இந்த வகையில் எந்த நாடும் அபிவிருத்தியடையவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
எனவே ஒரு மாயைக்குப் பின்னால் சென்று, அநாதரவாக வேண்டாம் எனவும், பொய் ஏமாற்று மாயைகளால் எமது நாடு வங்குரோத்தாகி போயுள்ளதாகவும், அதன் இரண்டாவது அத்தியாயத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்காதீர்கள் எனவும், அவ்வாறு நடந்தால் நாடு இன்னொரு பாதாளத்தில் விழும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நேரத்தில் நாட்டுக்கு சிறந்த ஆட்சியே தேவை என்றும், திருட்டு, ஊழல், மோசடிகளைத் தடுத்து நல்ல முதலீட்டுச் சூழலை உருவாக்க வேண்டும் எனவும், எந்த சூழ்நிலையிலும் நாங்கள் புன்னியத்திற்கு முதலீடுகளையோ அல்லது உதவிகளையோ பெறமாட்டோம் எனவும், இதற்கு பொருத்தமான சமூக பொருளாதார அரசியல் சூழல் உருவாக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் The Blue Print பொருளாதார மாநாட்டின் மற்றுமொரு கட்ட மாநாடு நேற்று (27) குருநாகல் மாவட்டத்தை இலக்காக் கொண்டு குருநாகல் Hang Out ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான முக்கிய உபாயங்கள் மற்றும் பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமான பல நடைமுறை ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.