கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் நபர்களின் உடல்களை விறகுகளை பயன்படுத்தி தகனம் செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கு அனுமதியை வழங்க முடியாதென யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
மாவட்ட கொரோனா ஒழிப்புக் குழுவிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் உள்ளிட் வடமாகாணத்தில் கொரோனா மரணங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.
உடல் தகனம் செய்யும் மயானங்கள் தொடரந்து இயங்கிவருவதால் மேலதிக உடல்களை அங்கு தகனம் செய்வதற்கு இடநெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
அதனால் இந்தியாவில் மேற்கொண்டதைப் போல விறகுகளைப் பயன்படுத்தி கொரோனா உடல்களை தகனம் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, மாவட்ட செயலாளரினால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
(தமிழன்)