நாட்டை சில நாட்களுக்கேனும் முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை

நாட்டை சில நாட்களுக்கேனும் முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமான நெத் இணையப்பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மின்வெட்டு காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்கள் காரணமாக, நாட்டை சில தினங்களுக்கேனும் முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்களை மேற்கோள்காட்டி, நெத் இணையப்பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

Link6- http://nethgossip.lk/article/40337

Next Post

உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

Fri Apr 1 , 2022
இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வீட்டிற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்ற நிலையிலேயே, இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

You May Like