கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக இலங்கையில் முதலாவது மரணம்

கோவிட் நிமோனியா மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக இலங்கையில் முதலாவது மரணம் சம்பவித்துள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் பிரதானி விசேட சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் ருவான்புர தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோவிட் நிமோனியா காரணமாக ஒருவர் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதியே அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஆய்வின் அறிக்கை நேற்று கிடைத்த நிலையில் ஆய்வு அறிக்கைக்கு அமைய உயிரிழந்தவரின் நுரையீரலில் கறுப்பு பூஞ்சை தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரொஹான் ருவான்புர குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூஞ்சைகள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் திரிமாலி ஜயசேகர ஆராய்ச்சியை நடத்தியுள்ளார்.

இலங்கையில் கோவிட் நிமோனியா மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக உயிரிழந்த நபரின் மரணம் சம்பந்தமாக நடத்தப்பட்ட முதலாவது பிரேத பரிசோதனை இதுவாகும் எனவும் விசேட சட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.

Next Post

சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் 25 ஆம் திகதி முதல் மீள ஆரம்பம்

Fri Oct 22 , 2021
அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை ( 25 ஆம் திகதி )ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதார பிரிவினர் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.   பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   COVID தடுப்பு விசேட குழுவுடன் காணொளி தொழில்நுட்பத்தினூடாக இன்று பிற்பகல் நடைபெற்ற […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu