உலகின் அழுக்கான மனிதர் காலமானார்! பல வருடங்கள் குளிக்காமல் இருந்தது ஏன்?

உலகின் அழுக்கான மனிதர் என்று அறியப்பட்ட ஈரானை சேர்ந்த அமவு ஹாஜி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. அமவு ஹாஜி என்பவர் தெற்கு ஈரானின் டேஜா என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் பல தசாப்தங்களாக குளிக்கவே இல்லை. குளித்தால் உடல் நலக் குறைவு ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினாலும், தண்ணீர் மீது உள்ள பயத்தினாலும், குளிப்பதை நிறுத்திவிட்டார்.

அமவு கிராமத்திற்குள் வசிப்பதில்லை. இவருக்கு சொந்தமாக வீடு எதுவும் இல்லை, துணையாக மனிதர்கள் இல்லை. கிராமத்திற்கு வெளியில் இருக்கும் பாலைவனத்தில் உள்ள நிறைவு பெறாத கட்டடங்களில் தான் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு பிடித்த உணவு முள்ளம்பன்றி கறி. மேலும் வீட்டில் சமைத்த உணவு என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார் என டிஎன்ஏ தளம் தெரிவிக்கிறது. இவருக்கு புகைப்பிடிக்க பிடிக்குமாம். ஒரே சமயத்தில் கையில் ஐந்து சிகரெட்களை வைத்து இவர் புகைப்பது வழக்கம். இவர் தனக்கு குளிக்க பிடிக்கவில்லை என்றும், குளித்தால் நோய்வாய்ப்பட்டு விடலாம் என்ற எண்ணத்தில், பல தசாப்தங்களாக குளிக்காமல் இருந்திருக்கிறார். இதனால் இவரை உலகின் அழுக்கான மனிதர் என்று கூறி வந்தனர்.

Next Post

மின்சார பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி

Wed Oct 26 , 2022
2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் மின்சார பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறவிடுவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் இந்த வரி அறவிடப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தின்படி, இலங்கை மின்சார சபையின் மின்சாரம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu