குரங்குளை கொண்டு வருமாறு எந்தவொரு தரப்பினரும் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைக்கவில்லை என சீன தூதரகம்

இலங்கையில் இருந்து 100,000 குரங்குளை கொண்டு வருமாறு எந்தவொரு தரப்பினரும் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைக்கவில்லை என சீன தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் எந்தவொரு தரப்பினரும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கவில்லை என அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், இது தொடர்பான சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக பங்களிப்பதாகவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை விலங்குகளை சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 100,000 குரங்குகளை வழங்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இது தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கல்வியை பணயக் கைதிகளாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Wed Apr 19 , 2023
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வியை பணயக் கைதிகளாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பரீட்சை விடைகளை சரிபார்த்து ஒரு வாரத்திற்குள் இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் அவசர சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவோம் என்றார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu