?ஹம்பாந்தோடை- திஸ்ஸமகாராமய வாவி ஆழப்படுத்தி துப்புரவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் சீன இராணுவத்தினர் இல்லை எனவும் அவ்வாறான ஆடையினை அணிந்தவர்கள் தொழிலாளர்கள் எனவும் இதை அறிந்தும் திசைதிருப்பும் வகையில் News1st தலைப்பு செய்தியாக அறிக்கையிடுவதாக சீன தூதரகம் ருவிட்டரில் தெரிவித்துள்ளது.
இந்த செயற்திட்டம் இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.