எரிபொருள் பற்றாக்குறையினால் நேற்றைய தினம் செயலிழந்திருந்த அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால் இன்று மின்வெட்டு அவசியமில்லை எனவும் சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட போதிலும், அதனை மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகம் செய்ய பல மணித்தியாலங்கள் தேவைப்பட்டதுடன், நாடு முழுவதும் நேற்று மின்சார விநியோகம் அவ்வப்போது துண்டிக்கப்பட்டது.