யாழ்ப்பாணம் பண்ணை கடலில் நேற்று (08) மாலை தவறி விழுந்து காணாமற்போனவர் இன்று அதிகாலை 6 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் பணியாற்றும் இவர் பண்ணை பாலத்தடியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இரு நண்பர்களுடன் வந்துடன் பாலத்தில் நின்று செல்பி புகைப்படம் எடுத்த போது தவறி வீழ்ந்துள்ளார்.
தவறி வீழ்ந்தவரை பாலத்தின் கீழான நீரோட்டம் அடித்து சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக கடற்படையினை தேடுதல் நடாத்தி இருந்தனர்.
இந்நிலையில் பண்ணை பகுதியிலிருந்து இன்றையதினம் திங்கட்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நீதிவான் வருகைதந்து விசாரணை நடத்தியதுடன் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.