தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த காலப் பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த அனுமதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல், எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது