பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த பின்னர் கைது செய்ய தேடப்பட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகன்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த பின்னர் கைது செய்ய தேடப்பட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரதி அமைச்சரின் மகன் நேற்று இரவு 10 மணிக்கு டுபாய் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தப்பியோடிய சந்தேகநபரின் தந்தை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதியமைச்சர் எனவும், பின்னர் அவர் கட்சியில் இருந்து விலகிஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதாகவும், தற்போது அவர் கொழும்பிற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த (9) ஜனாதிபதி மாளிகையை போராட்டகாரர்கள் ஆக்கிரமித்த பின்னர் , அரசியல்வாதியின் மகன் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குச் சென்று சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு, நாங்கள் ஜனாதிபதி மாளிகையை சோதனையிட்டேன், அதற்கு தகுதியானவர்களை வருமாறு தெரிவிக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவின் வீடு சோதனையிடப்பட்டதுடன், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதம் கிடைக்கும் வரை வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அங்கிருந்து இந்த காணொளியை பதிவு செய்த பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு அவருடன் பல தடவை போராட்டங்களில் ஈடுபட்ட அரசியல்வாதி ஒருவருடன் குறித்த பெண் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்கள் தொடர்பான அனைத்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(Lankadeepa)

Next Post

இன்று முதல் பொது அவசர நிலை பிரகடனம்! பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு

Mon Jul 18 , 2022
இலங்கையில் இன்று முதல் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு 8 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் […]

You May Like