ஜனாதிபதி மாளிகை முற்றுகை! உள்ளே நுழைந்த மக்கள்
கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாகவும், தற்காலிக ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில் இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.