ஆப்கானிஸ்தானின் தலிபான் கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் காஹ்னி தமது நாட்டிலிருந்து தஜிகிஸ்தானுக்கு வெளியேறியதையடுத்து கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியுள்ளனர்.
நாட்டின் பல முக்கிய நகரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலிபான், இன்று தலைநகர் காபூலுக்குள் நுழைந்திருந்தனர்.