ரஷ்ய ஏரோஃப்ளொட் விமானமொன்றை தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் பிஸ்கால் அதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏரோஃப்ளொட் நிறுவனத்துக்கு சொந்தமான ஏ 330 ரக விமானத்தை தடுத்து வைப்பது தொடர்பில் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை அமுல்படுத்துவதில், நீதித்துறையை முறைகேடாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் பிஸ்கால் அதிகாரியை பணி இடைநிறுத்தம் செய்ய நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சட்டத்தரணிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட பிரதம நீதியரசருக்கு அறிவிக்க நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.