தனுஸ்க, நிரோஷன், குசலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனை

கடந்த இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்க அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பரிந்துரை விடுத்துள்ளது.

தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் இன்று குறித்த குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தனர்.

இதன்போது, நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாத கிரிக்கெட் தடையும் தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மென்திஸ்க்கு எதிராக 24 மாத கிரிக்கெட் தடையும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தலா 25,000 டொலர் பணமும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Next Post

கொவிட் வைரஸ்’ நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

Fri Jul 30 , 2021
இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். அலுலங்கள் மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்களில் தொற்று தொடர்பான விதிகளை கடைபிடிக்கப்படுவதில் போதிய கவனம் செலுத்தப்படுவதைக் காணக்கூடியதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் […]

You May Like