ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இதன்படி, காமினி லொகுகே புதிய எரிசக்தி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
உடன் அமுலுக்குவரும் வகையில், இருவரது அமைச்சு பொறுப்புக்களும் ஜனாதிபதியினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கின்றது.
Via:
True Ceylon