கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அன்டீஜன் பரிசோதனை திடீர் நிறுத்தம் – மக்கள் அசௌகரியத்தில்
கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகள், கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளமையினால், மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
PCR மற்றும் ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளுக்கு நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து, அண்மையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
இதன்படி, ரெபிட் அன்டீஜன் பரிசோதனையொன்றை செய்துக்கொள்வதற்கு 2000 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளை, குறித்த கட்டுப்பாட்டு விலையில் மேற்கொள்ள முடியாது என்ற அடிப்படையிலேயே, பரிசோதனைகளை செய்யும் அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், கொழும்பிலுள்ள பிரதான தனியார் வைத்தியசாலைகளில் ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளை நடத்திக் கொள்வதற்கு மக்கள், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும், கொழும்பு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வழமை போன்று PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது…